பிரதமர் மோடியும், நிதிஷ் குமாரும் சேர்ந்து பீகாரின் அரசியல் போக்கை மாற்றி அமைத்தனர் - பாஜக தேசிய தலைவர் நட்டா
பிரதமர் மோடியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரும் சேர்ந்து பீகாரின் அரசியல் போக்கை மாற்றி அமைத்து விட்டதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கூறியுள்ளார்.
வரும் 28 ஆம் தேதி பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
அது தொடர்பாக கயாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நட்டா பேசினார்.சுகாதாரம், நலவாழ்வு, வேளாண்மை மற்றும் கல்வித் துறைகளில் பல முன்னேற்றங்களை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார் என அவர் கூறினார்.
இந்தியாவின் தலைமைத்தகுதி மோடியின் கரங்களில் பத்திரமாக இருக்கிறது என்ற அவர், ஜாதி-மத அடிப்படையிலான அரசியலை காங்கிரஸ் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
Comments