சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பாஜக நிர்வாகிகள்-சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 15271
சென்னை - ஆயிரம் விளக்கு சூப்பர் மார்க்கெட்டில் பாஜக நிர்வாகிகள், அத்து மீறி நுழைந்து கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பான சிசி டிவி காட்சி வெளி யாகி உள்ளது.

சென்னை - ஆயிரம் விளக்கு சூப்பர் மார்க்கெட்டில் பாஜக நிர்வாகிகள், அத்து மீறி நுழைந்து கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பான சிசி டிவி காட்சி வெளி யாகி உள்ளது.

"தி ஆர்ஜின்" என்ற சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஷநாஸ் என்பவருக்கும், கட்டிட உரிமையாளர் ஷபிகா ரிப்பாயிக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.  கட்டிட உரிமையாளருக்கு ஆதரவாக கடந்த 8 ஆம் தேதி களமிறங்கிய தென்சென்னை மாவட்ட பாஜக துணை தலைவர் குணசேகரன் தலைமையிலான அக்கட்சியின் நிர்வாகிகள், சூப்பர் மார்க்கெட்டை சூறையாடினர்.

இவர்கள், ஐஸ் க்ரீம், பாதாம், பிஸ்தா ,வாசனை திரவியம்,  ஷாம்பு,  பாடி வாஸ், ஷூ, செருப்பு  என பல்வேறு பொருட்களை, கையில்  கொண்டு வந்த பைகளில் நிரப்பி, மினி லாரி மூலம் எடுத்து சென்றனர்.

கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களின்மொத்த மதிப்பு சுமார் 24 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 19 பேரை கைது செய்துள்ள ஆயிரம் விளக்கு போலீசார், தலைமறைவான பாஜக பிரமுகர்களை பிடிக்க, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments