சேலத்தில் சிறுவனின் கையை துளைத்த ஒரு அடி நீள இரும்பு கம்பி வெற்றிகரமாக அகற்றம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கிரில் கேட்டில் ஏறி விளையாடிய சிறுவனின் கையில் குத்தி நுழைந்த கம்பியை அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர்.
ஏற்காடு முருகன் நகரை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகனான 15 வயது சஞ்சய் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள சுவரில் ஏறி குதித்து விளையாடியபோது தவறி கிரில் கேட்டில் விழுந்தான்.
இந்த கிரில் கேட்டில் அம்பு போல் உள்ள பகுதி சிறுவனின் வலதுகையில் சுமார் ஒரு அடி நீளத்திற்கு குத்தி உள் நுழைந்தது. பெற்றோரும், அங்கிருந்த பொதுமக்களும் கிரில் கேட்டில் இருந்த கம்பியை ஆக்சா பிளேடால்அறுத்தனர்.
பிறகு சிறுவன், கையில் குத்தி இருந்த கம்பியுடன் சேலம் அரசுமோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கம்பியை அகற்றினர்.
Comments