ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

0 2245
ஐக்கிய அரபு அமீரகத்தில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் மூன்று அணிகளின் வீராங்கனைகள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் 4 முதல் 9 வரை ஷார்ஜாவில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் சூப்பர்நோவாஸ், டிரெயில்பிளேசர்ஸ், வெலாசிட்டி ஆகிய 3 அணிகள் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

சூப்பர்நோவாஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுரும், டிரெயில்பிளேசர்ஸ் அணிக்கு ஸ்மிரிதி மந்தணாவும், வெலாசிட்டி அணிக்கு மிதாலி ராஜும் தலைமை ஏற்கின்றனர்.

இந்த 3 அணிகளிலும் இந்திய வீராங்கனைகள் தவிர இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், நியூசிலாந்து நாட்டு வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளதாகக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments