மைனஸ் 50 டிகிரி குளிரில் எல்லையை காக்கும் வீரர்களுக்கான சிறப்பு ஆடைகளின் உள்நாட்டு உற்பத்தியில், சுயசார்பை எட்ட வேண்டும் - ராணுவ துணை தளபதி எஸ்.கே.சைனி
கிழக்கு லடாக் எல்லையில் மைனஸ் 50 டிகிரி குளிரில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள நமது வீரர்களுக்கு பொருத்தமான சிறப்பு ஆடைகளின் உள்நாட்டு உற்பத்தியில், சுயசார்பை எட்ட வேண்டும் என ராணுவ துணை தளபதி எஸ்.கே.சைனி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே போன்று மலையேறுவதற்கான உபகரணங்களின் உற்பத்தியிலும் சுயசார்பை எட்ட வேண்டும் என போர்க்கலன்கள் தொடர்பான வெப் கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில் அவர் வலியுறுத்தினார்.
இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை நம்பி இருப்பதை குறைக்கவேண்டும் என்றார் அவர்.
அதே போன்று முக்கிய ராணுவ தளவாடங்களை நிறுவுதல், அதிசக்தி வெடி மருந்துகள், டிரோன்கள் போன்றவற்றிலும் உள்நாட்டு பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ராணுவ தளவாடங்களை கையாளுவதில் மனிதர்களின் நேரடி பங்களிப்பை குறைத்து, தானியங்கி முறைகளை அமல்படுத்துவதும் அவசியம் என துணை ராணுவ தளபதி கூறினார்.
Comments