உலகிலேயே கண்டம் விட்டு கண்டம் பாயும் பெரிய ஏவுகணை... வட கொரியா உருவாக்கியுள்ள ஏவுகணையால் அமெரிக்காவுக்கு நெருக்கடி?
வட கொரியா உருவாக்கியுள்ள புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், நவம்பருக்குப் பிறகு வேறு அதிபர் பொறுப்பேற்றால் அவருக்கும் பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
பியோங்யாங்கில் உள்ள கிம் சதுக்கத்தில், முதன்முறையாக இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பில் இந்த ஏவுகணையை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார்.
இந்த ஏவுகணை சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடிய , திரவ எரிபொருளால் இயங்கும் உலகிலேயே மிகப்பெரிய ஏவுகணை என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் MIRV வகையிலான இந்த ஏவுகணையில் பல்வேறு வகையான ஆயுதங்களையும் எடுத்துச் செல்லலாம் என்பது சிறப்பம்சமாகும். அலாஸ்காவில் உள்ள அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பினை வெற்றிகரமாக சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஏவுகணையை, வட கொரியா அடுத்த மாதம் சோதித்துப் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments