டிரம்பால் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் இல்லை - மருத்துவர் சீன் கோன்லே
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பால் பிறருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இல்லை என வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கோன்லே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த பின் சில நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின் முதன்முறையாக நேற்று வெள்ளை மாளிகையின் மாடியில் நின்றபடி அங்குப் புல்வெளியில் நின்ற பொதுமக்களிடம் பேசினார்.
இது குறித்து டிரம்பின் மருத்துவரான சீன் கோன்லே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் விதிமுறைப்படி தனிமைப்படுத்தலை டிரம்ப் விட்டுவிட முடியும் என்பதால், அவரால் பிறருக்குத் தொற்று பரவும் அபாயம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments