போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ராகிணி திவேதியின் நண்பரிடம் மீண்டும் விசாரிக்க முடிவு
போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவிசங்கரிடம், கடந்த 2018ம் ஆண்டு பெங்களூருவில் சிக்கிய போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
நடிகை ராகிணி திவேதி மற்றும் அவரது நண்பர் ரவிசங்கர், நடிகை சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் ஏற்கெனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு பெங்களூருவில் போதைப்பொருள் சிக்கிய வழக்கில் ரவிசங்கருக்கு தொடர்பு இருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில் ரவிசங்கரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதற்கான அனுமதியை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பெற்றனர்.
இந்நிலையில் இன்று முதல் 6 நாட்களுக்கு ரவிசங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
Comments