அசாம் அரசின் கீழ் செயல்படும் மதரசாக்கள், சமஸ்கிருதப்பள்ளிகள் மூடப்படும் - அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா

0 1524
அசாம் அரசின் கீழ் செயல்படும் மதரசாக்கள், சமஸ்கிருதப்பள்ளிகள் மூடப்படும் - அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா

அசாமில் அரசு நிர்வாகத்தில் செயல்படும் மதரசாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகள் ஆகியவற்றை மூடுவதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அசாமில் அரசு நிர்வாகத்தின்கீழ் 614 மதரசாக்களும், நூற்றுக்கு மேற்பட்ட சமஸ்கிருதப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

மதரசாக்களில் அரபு மொழியும், இஸ்லாமிய மதபோதனைகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

சமஸ்கிருதப் பள்ளிகளில் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில் மதபோதனைகள் செய்வதற்கு அரசு பணத்தைச் செலவிடக் கூடாது என மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி அரசு மதரசாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகள் மூடப்படும் எனக் கல்வியமைச்சரும் நிதியமைச்சருமான ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார்.

அரசு உதவி பெறும் தனியார் மதரசாக்கள், சமஸ்கிருதப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments