200 கொரோனா நோயாளிகளின் உடல்களை கொண்டு சென்று... 6 மாதம் ஆம்புலன்சிலேயே தங்கி சேவை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் கொரோனா தொற்றால் காலமானார்
200 க்கும் மேற்பட்ட தடவைகள் கொரோனா நோயாளிகளின் உடல்களை எடுத்துச் சென்று சேவையாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் இறுதியில் கொரோனாவுக்கே பலியான பரிதாபம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் இலவசமாக அவசரகால சேவைகளை வழங்கும் ஷஹீத் பகத் சிங் சேவா தளம் என்ற அமைப்பில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தவர் ஆரிப் கான்.
48 வயதான இவர் , வீட்டில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால்,கடந்த 6 மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் ஆம்புலன்சிலேயே தங்கி, கொரோனா நோயாளிகளின் உடல்களை இறுதிச் சடங்கு செய்வதற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாதவர்களுக்கு பண உதவியும், உற்றார் இல்லாத உடல்களுக்கு அவரே இறுதிச்சடங்கும் செய்து வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
Comments