பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் சோபியா கெனின் மற்றும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெறாத போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.
இதில் இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments