கடந்த ஆண்டு , இதே நாளில் சென்னையில் ஜின்பிங்!
சீன அதிபர் ஜின்பிங் கடந்த ஆண்டு அக்டோபர்11- ஆம் தேதி இருநாள் விஜயமாக சென்னைக்கு முதன்முறையாக வருகை தந்தார்.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அதிகாரபூர்வமற்ற முறையில் 2018 - ஆம் ஆண்டு உஹான் நகரில் சந்தித்துப் பேசினார்கள். இதன் தொடர்ச்சியாக . 2019 ம் ஆண்டு அக்டோபர் 11 -ஆம் தேதி சென்னை வந்த ஜின்பிங்குக்கு விமான நிலையத்தில் தமிழக முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கிண்டியில் உள்ள ஐ.டி.சி ஹோட்டலில் தங்கியிருந்த அவர் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பர்ய வேட்டி , சட்டை அணிந்து ஜின்பிங்கை வரவேற்றார்.
பிறகு, அக்டோபர் 12 - ஆம் தேதி மாமல்லபுரம் கடற்கரையை ஒட்டியுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சீன அதிபருக்கு பிரதமர் விருந்தளித்து கௌரவித்தார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு. இந்தியாவுடன் சீன உறவு வலுப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கல்வானில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியான சம்பவம், அதை தொடர்ந்து லே பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்திய சீன உறவு சீரழிந்து போனது. போதாகுறைக்கு சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளே முடங்கிக் கிடக்கின்றன.
Comments