கரை கடந்த கடும் புயல்
அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த டெல்டா புயல் லூசியானா பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியவாறே கரையைக் கடந்தது.
மெக்ஸிகோ வளைகுடாவில் 4ம் நிலைப் புயலாக உருவான டெல்டா புயல் நேற்று மாலையில் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் கிரியோல் பகுதியில் கரையைக் கடந்தது.
அப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்றடித்தது. இதன் காரணமாக ஊழிக்காற்றும், கனமழையும் கொட்டித் தீர்த்தன.
புயல் காற்று காரணமாக ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.
காற்றின் கோரதாண்டவத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான மரங்கள் கிளைகளை இழந்து நின்றது பரிதாபமாக இருந்தது.
மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன.
வீடுகளின் மேற்கூரைகள் காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சாலையில் சென்ற சில வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின.
பெருங்காற்று காரணமாக லூசியானா முழுவதும் 5 லட்சத்து 75 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.
மேலும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments