குறைந்த விலையில் மாநில அரசுகளுக்கு உளுந்து, துவரம் பருப்புகள் வழங்க மத்திய அரசு முடிவு
விலைவாசியைக் கட்டுப்படுத்த உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு போன்றவற்றை குறைந்த விலையில் மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எண்ணெய், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தையில் விலை அதிகரிப்பதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநில அரசுகளுக்கு உளுந்தம் பருப்பு கிலோ 79 ரூபாய்க்கும் துவரம் பருப்பு கிலோ 81 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments