பீகார் சட்டமன்றத் தேர்தல் பாஜக வேட்பாளர்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.
2வது முறையாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 120 தொகுதிகளில் 11 தொகுதிகள் கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பீகாரில் வரும் 28 ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி முதல்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
Comments