பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

0 2170
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர் ஷுப்மன் கில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில், பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் 56 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானர். கடைசி வரை போராடிய ராகுல் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், 4 ரன்கள் மட்டும் அடித்ததால், கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments