மாடியில் இருந்து கீழே விழ இருந்த சிறுவனை லாவகமாக காப்பாற்றிய வியாபாரி

0 4670
மாடியில் இருந்து கீழே விழ இருந்த சிறுவனை லாவகமாக காப்பாற்றிய வியாபாரி

திருச்சி அருகே மாடியில் இருந்து கீழே விழ இருந்த சிறுவனை வியாபாரி ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றினார்.

மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சியைச் சேர்ந்த முகமது சாலிக், வழக்கம் போல இரு சக்கர வாகனத்தில் ஓமதிரவம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய சென்றார்.

அவர், தோப்புபட்டி கிராமத்தில் சென்ற போது, சாலையோரத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து ஒரு சிறுவன் கதறும் குரல் கேட்டது. இதனால் வண்டியை நிறுத்தி விட்டு, உடனடியாக அங்கு அவர் ஓடினார்.

வீட்டின் மொட்டை மாடியின் கைப்பிடிச்சுவருக்கு வெளியே ஒரு சிறுவன் தொங்கிக் கொண்டிருந்தான்.  கீழே விழுந்து விடாமல் அவனது கையை, சிறுவனின் சகோதரி பிடித்துக் கொண்டிருந்தார்.

அந்த சிறுமியை மெல்ல கையை விடுமாறு கூறிய முகமது சாலிக், அந்த சிறுவனை லாவகமாக பிடித்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் எதிர்த்த வீட்டில் இருந்து சிலர் இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்தனரே தவிர, ஓடி வந்து காப்பாற்ற முயலவில்லை.

இணையதளங்களும், அதில் கிடைக்கும் பைசாவுக்கும் ஆகாத லைக்குகளுக்குமாக மனிதாபிமானத்தை மறக்கும் மற்றொரு நிகழ்வு மணப்பாறை அருகிலும் நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments