"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கோவாக்சின் மருந்தின் 2 ஆம் கட்டச் சோதனை தரவுகளை ஒப்படைக்க, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தல்
கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனைக்கு முன், இரண்டாம் கட்டச் சோதனைத் தரவுகளை வழங்க வேண்டும் என பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து கோவாக்சின் என்னும் மருந்தைத் தயாரித்துள்ளது. இந்த மருந்தின் இரண்டு கட்டச் சோதனை நடைபெற்ற நிலையில் மூன்றாம் கட்டச் சோதனையை நடத்த மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் ஒப்புதல் கோரியுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, கோவாக்சின் மருந்தின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவை பற்றி இரண்டாம் கட்டச் சோதனையில் கண்டறியப்பட்ட தரவுகளை ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளது.
Comments