இந்தியா விரும்பினால் லடாக் பதற்றத்தை தூள்-தூளாக்கலாம்! அமெரிக்கா திடீர் அழைப்பு.!

0 63874
இந்தியா விரும்பினால் லடாக் பதற்றத்தை தூள்-தூளாக்கலாம்! அமெரிக்கா திடீர் அழைப்பு.!

60 ஆயிரம் வீரர்களை லடாக் எல்லையில் சீனா குவித்திருப்பதாக கூறியிருக்கும் அமெரிக்கா, பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்களை சீனா ஒருபோதும் மதிக்காது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் இமயமலைச் சாரலில், லடாக் தொடங்கி, அருணாச்சல் பிரதசேம் வரையிலான, மெய்யான கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில், கடந்த மார்ச் மாதம் முதல், சீனா அத்துமீற முயற்சிக்கிறது.

அண்மைக்காலங்களில், முன்கூட்டியே கணித்து, சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு, இந்தியா கடும் பதிலடியோடு, முற்றுப்புள்ளி வைத்து வருகிறது.

இந்நிலையில், லடாக் பதற்றம் தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, மூன்று வெவ்வேறு நேர்காணல்களில், கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

லடாக்கை ஒட்டியப் பகுதிகளில், சீன ராணுவம் 60 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ளதாக மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

இந்தோ - பசிபிக் மண்டலம், கிழக்கு லடாக், தென்சீனக் கடல் ஆகிய பகுதிகளில் சீன ராணுவம், தனது வலிமையை அதிகரிப்பதன் மூலம், ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு தேவைப்படுவதாகவும்  மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இந்தியா விரும்பினால், அந்நாட்டிற்கு உதவிகள் புரிந்து, சீனாவின் அத்துமீறலை வெற்றிக்கரமாக முறியடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை முழுமையாக அபகரிக்க சீனா திட்டமிடுவதாக எச்சரித்திருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, எனவே, சீனாவுடன், இந்தியா நடத்தும், அமைதிப் பேச்சுவார்த்தை,ஒப்பந்தங்கள் எந்த பயனையும், எவ்வித மாற்றத்தை கொண்டுவரப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவிற்கும், அதன் மிக நெருங்கிய கூட்டாளிகளான, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதால், இனி வரும் காலங்களில், சீன கம்யூனிச அரசுடன், ஆற அமர, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால், எந்த பிரயோஜனமும் ஏற்படபோவதில்லை என்றும் மைக் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments