வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு
வங்கிகள் கடன் பெறுவதற்கான செலவு குறைந்துள்ளதால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் முப்பது லட்ச ரூபாய்க்குக் குறைந்த தொகைக்கும், முப்பது லட்சத்தில் இருந்து 75 லட்ச ரூபாய் வரையிலான தொகைக்கும், 75 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கும் வெவ்வெறு வட்டி விகிதத்தை வைத்துள்ளன.
இந்நிலையில் வங்கிகள் கடன்பெறும் செலவை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
புதிய கடன் கொள்கைப்படி, வீட்டு மதிப்பில் அதை வாங்குபவர் செலுத்தும் பங்கு, வங்கிக் கடன் ஆகியவற்றின் விகிதத்தைப் பொறுத்தே வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
Comments