வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட் கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்

0 3532
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட் கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்

வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட் கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் திங்கட் கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

நீர்நிலைகளை தூர்வாருதல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments