'நான் படிக்கனும்; என் குடும்பம் நிம்மதியா வாழனும்!'- பக்கத்து வீட்டு இளைஞன் தொல்லையால் கதறும் சிறுமி..!

0 55397

திண்டுக்கல்லில், சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பக்கத்து வீட்டு இளைஞன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கதறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகேயுள்ள சதுரங்கப்பட்டினம் பஜார் தெருவில் வசித்து வருகிறார் அர்ச்சனா. இவரது சொந்த ஊர் கேரளா மாநிலத்திலுள்ள, கனிமங்கலம் ஆகும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உதயகுமார் இறந்து விட்டதால், 11 - ஆம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் 4 - ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் அர்ச்சனா தனியாக வசித்து வருகிறார்.

சதுரங்கப்பட்டினம் பஜார் தெருவில் சொந்தமாக  இவர்களுக்கு வீடு உள்ளது. இவர்களது பக்கத்து வீட்டில் உறவினர் உதயகுமாரின் சகோதரி புஷ்பலதா, கணவர் அரவிந்தன் மகன் விஷ்னு மற்றும் மகளுடன் வசிக்கின்றனர். 21 வயதான விஷ்ணு அடிக்கடி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது கடந்த 30 ம் தேதி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததால், அவனிடமிருந்து தப்பிய சிறுமி தாயிடம் வந்து அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தாய் அர்ச்சனா அரவிந்தனிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த அரவிந்தன் குடும்பத்தினர் அர்ச்சனா  மற்றும் அவரது மகளை சராமரியாக அடித்துள்ளனர். காயமடைந்த தாயும், மகளும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அர்ச்சனாவிடம், காவல்துறையில் புகார் செய்தால் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விடுவேன் என்று அரவிந்த் மிரட்டியதாக கூறப்படுகிறது.  பின்னர், கடந்த 3 - ம் தேதி அர்ச்சனா வழக்கறிஞருடன் சென்று சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட சதுரங்கப்பட்டினம் போலீசார் அரவிந்த் மற்றும் அவரது மகன் விஷ்ணு, மனைவி புஷ்பலதா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து , விஷ்ணு தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து அர்ச்சனா கூறுகையில்,‘ கணவர் உதயகுமார் உயிருடன் இருக்கும் போது, வெல்டிங் வேலை செய்து இந்த வீட்டைக் கட்டினார். இந்த சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில் இது போன்று நடந்து கொள்கின்றனர். என் கணவர் இறந்ததும் மர்மமாக உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தார். சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, செங்கல்பட்டு உடற்கூறு ஆய்வகத்துக்கு அனுப்பி போஸ்மார்ட்டம் செய்யும்படி கெஞ்சி கேட்டேன். ஆனால், இப்படியெல்லாம் செய்தால் உன் குழந்தைகளைக் கொன்று விடுவோம் என்று என்னை அவர்கள் மிரட்டினர். என் கணவர் இறப்பிலும் மர்மம் இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் மாணவி, “நான் படிக்க வேண்டும். எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். எங்கள் அம்மாவுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது” என்று அழுதபடி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments