அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சகத்துக்கு துணைவேந்தர் சுரப்பா கடிதம்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நிதி பங்களிப்பு, 69% இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது.
இதற்காக அமைச்சர்கள், அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் நடவடிக்கைகளும் கொரோனா காரணமாக தடைபட்டது. இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிக்கும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா எழுதியுள்ள கடிதத்தில், கல்லூரிகளின் இணைப்புக் கட்டணம், தேர்வு கட்டணம், செமஸ்டர் கட்டணம் ஆகியவற்றை சேர்த்து ஆண்டுக்கு 314 கோடி ரூபாய் என 5 ஆண்டுக்கு 1,570 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என்றும், தாமதிக்காமல் உடனடியாக சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சகத்துக்கு துணைவேந்தர் சுரப்பா கடிதம் #AnnaUniversity | #SpecialStatus https://t.co/RgHEKxSrPR
— Polimer News (@polimernews) October 10, 2020
Comments