சீனாவுடனான மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு தேவை: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ

0 2816
சீனாவுடனான மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு தேவை: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ

சீனாவுடனான மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு தேவைப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

அதை எதிர்கொள்வதற்காக இந்தியாவும் படை வலிமையை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, சீனாவுக்கு அதன் அருகிலேயே வலிமையான எதிர்ப்பு வளர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்த மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு உறுதியாகத் தேவைப்படுவதாகவும் மைக் பாம்பியோ குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments