EMI ஒத்திவைப்பு காலத்தை மேலும் நீட்டிப்பது சாத்தியமில்லை - ரிசர்வ் வங்கி

0 32213
வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது, கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒழுங்கை பாதிப்பதோடு, கடன் வழங்கும் முறையை பலவீனப்படுத்தி விடும், வாடிக்கையாளர்கள் மீதான சுமையை அதிகரிக்கச் செய்துவிடும், தள்ளிவைப்புக் காலம் முடிந்த பிறகு கடனை திருப்பிச் செலுத்தும் கடமையில் இருந்து வழுவச் செய்துவிடும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வட்டி மீதான வட்டி தள்ளுபடி என்ற மத்திய அரசின் திட்டம், பிரச்சனைகளை தீர்க்க தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

ரியல் எஸ்டேட் மற்றும் மின்துறையின் கவலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்ததோடு, புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments