ஆர்மீனியா, அஸர்பைஜான் நாடுகளிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆர்மீனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
நாகோர்னோ - கராபாக் பிராந்தியங்களுக்கு உரிமை கோரி கடந்த மாதம் 27ஆம் தேதிமுதல் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஏராளமானோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் முன்னிலையில் ஆர்மீனிய மற்றும் அஸெரி நாட்டுப் பிரதிநிதிகளுடன் சுமார் 10 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் முதல் போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாக செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
போர்க் கைதிகள் மற்றும் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பரிமாறிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments