ஊராட்சி மன்றங்கள் அனுமதியில்லாத சாலை டெண்டர்கள் ரத்து-உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

0 2585

கிராம சாலை மேம்பாட்டு பணிகளின் டெண்டர்களை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, மனதார வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இ - டெண்டர் விடும் முறையை, அரசு இத்தோடு கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 14வது நிதிக்குழு நிதியிலான, அனைத்துப் பணிகளையும் ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments