குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில் சேவை இப்போதைக்கு தொடங்காது- தெற்கு ரயில்வே
குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில் சேவை இப்போதைக்கு தொடங்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் மலை ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. தளர்வுகளைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயிலல் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில்சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Comments