பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நோவோக் ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் மோதல்

0 1590
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நோவோக் ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் மோதல்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு, உலகின் நம்பர் ஒன் வீரரான நோவோக் ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

அரையிறுதிப் போட்டியில் கிரேக்க வீரர் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை எதிர்கொண்ட ஜோகோவிச், 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் 4 மணி நேரம் போராடி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 5வது முறையாக ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ரபேல் நடால், அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வர்ட்ஸ்மேனை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 6-3, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற நடால், 13வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments