நாளை மறுநாள் மீண்டும் நடக்கிறது இந்தியா- சீனா இடையிலான பேச்சுவார்த்தை... முழு துருப்புகளையும் பின்வாங்குமாறு வலியுறுத்த இந்தியா முடிவு

0 1275
சீனாவுடன் நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள, முழு துருப்புகளையும் பின்வாங்குமாறு வலியுறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

சீனாவுடன் நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள, முழு துருப்புகளையும் பின்வாங்குமாறு வலியுறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னை, சுமார் 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனிடையே, எல்லையில் அமைதியை நிலை நாட்ட இருதரப்பிலும், இராணுவ மட்டத்திலான 7ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் சீனா உடனான பிரச்னை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு, டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ராணுவ தளபதி நாரவனே ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கிழக்கு லடாக் மட்டுமின்றி இருநாட்டு ராணுவம் குவிக்கப்பட்டுள்ள அனைத்து எல்லைப்பகுதியில் இருந்தும், முழுமையாக துருப்புகளை வெளியேற்றுமாறு சீனாவிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் மாதத்திற்கு முன்பாக இருந்த இயல்பு நிலை, மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் இலக்காக உள்ளது.

அமைதிக்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், 50 ஆயிரத்திற்கும் அதிகமான சீன ராணுவ வீரர்களுடன், ஏவுகணைகள், டாங்கிகள் மற்றும் ஆயுதங்கள் நிரம்பிய வாகனங்கள் போன்றவை எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், சீனாவின் எந்தவித நடவடிக்கைக்கும் பதிலடி தரும் வகையில், இந்தியாவும் எல்லையில் துருப்புகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments