எது ஆபாசம் ? இயக்குநர்கள் மோதல்
திரைப்படத்தில் 16 வயது சிறுமிகளை கவர்ச்சிக்காக பயன்படுத்திய பாரதிராஜா, இரண்டாம் குத்து திரைப்படம் எடுத்ததற்காக தன்னைப் பற்றி குற்றம் சொல்லலாமா என படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் எகிறியுள்ளார்.
பாரதிராஜாவின் டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்டவை, கவர்ச்சியை திரைக்கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்திய திரைப்படங்கள்.
இந்நிலையில், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டரும், டீசரும் கவர்ச்சி என்ற எல்லையை தாண்டியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார், A சர்டிபிகேட் படம் என்றாலே அது குடும்பத்தோடு பார்க்காமல் நண்பர்களோடு வந்து பார்ப்பதற்கான படம்தான் என்று தெரிவித்தார்.
பாரதிராஜா தனக்கு தாத்தாவைப் போல என்று கூறிய சந்தோஷ் ஜெயக்குமார், படத்தின் தணிக்கைச் சான்றிதழில் ஏதாவது குறைபாடு இருந்தால் சென்சாரிடம் அவர்போய் கேட்டுக் கொள்ளட்டும் என்றார்.
1970, 80களில் கவர்ச்சி எனும் பெயரில் இயக்குநர் பாரதிராஜா என்னவெல்லாம் செய்துள்ளார்? பாரதிராஜா படங்களில் பதின்ம வயதினர் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டார்கள்? என்பது தெரியாதா என கேட்ட சந்தோஷ் ஜெயக்குமார், தான் மைனர்களை வைத்து படம் எடுக்கவில்லை என்றும் எகிறினார்.
Comments