சொத்தை விற்று ஊதாரி செலவு! - கொல்லிமலையில் மாமனாரைக் கொலை செய்த மருமகன்கள்!

0 13393

கொல்லிமலையில் விவசாயியைக் கொலை செய்த வழக்கில் மருமகன்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தின்னனூர் நாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சாமிதுரை. இவர் கடந்த 6- ஆம் தேதி தேவனூர் நாடு பகுதியில் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாகப் பொதுமக்கள் வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சாமிதுரையை அவரது மருமகன்கள் ராஜ்குமார், பிரசாந்த் மற்றும் கார்த்திக், முருகேசன் பழனியப்பன் ஆகியோர் சேர்ந்து மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

சாமிதுரை கடந்தாண்டு நிலம் விற்ற பணத்தைத் தனது மனைவி 3 மகள்கள் மற்றும் 3 மருமகன்கள் உள்ளிட்ட யாருக்கும் தராமல் அவரே வைத்துக் கொண்டு செலவு செய்து வந்துள்ளார். சொத்து விற்ற பணம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்தது. இந்த தகராறு முற்றிய நிலையில் சாமிதுரை கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆம்னி காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments