ராஜஸ்தானில் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்த கோவில் பூசாரி உயிரோடு தீ வைத்து எரித்து கொலை
கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்த கோவில் பூசாரி உயிரோடு தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரவுலி மாவட்டத்தில் உள்ள சபோத்ரா என்ற கிராமத்தில் நிலத்தின் ஒரு பகுதியை வீடு கட்டிக் கொள்வதற்காக கோவில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பூசாரிக்கு வழங்கியது. அதில் அவர் கட்டுமானப் பணிகளை துவக்கிய நிலையில், நில ஆக்கிரமிப்பு கும்பல் அந்த இடத்தை வளைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதற்கு பூசாரி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கும்பலை சேர்ந்த 6 பேர் பூசாரி மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தனர். 50 சதவிகிதம் தீக்காயங்களுடன் ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments