மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் இறுதி அஞ்சலி

0 3172
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் இறுதி அஞ்சலி

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை காலமான பாஸ்வான் உடல் டெல்லி ஜன்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாஸ்வானின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

74 வயதான ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்தார். அவரது மறைவை ஒட்டி, டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments