அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால், அதிபர் பதவியை கமலா ஒரே மாதத்தில் கைப்பற்றுவார் - ட்ரம்ப் கருத்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால், கம்யூனிஸ்ட்வாதியான கமலா ஹாரிஸ் ஒரே மாதத்தில் அதிபர் பதவியை கைப்பற்றிவிடுவார் என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றாலும் 2 மாதங்கள் கூட அதிபராக நீடிக்க முடியாது என்று கூறினார்.
மேலும், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், ஒரு கம்யூனிஸ்ட் என்றும் அவர் சோசலிஸ்ட் இல்லை என்றும் கூறிய அதிபர் ட்ரம்ப், கொலையாளிகள், கொள்ளைக்காரர்களை நாட்டுக்குள் அனுமதிக்கும் வகையில் எல்லைகளை திறக்க கமலா விரும்புவதாக குற்றஞ்சாட்டினார்.
Comments