அனைத்து விவகாரங்களிலும் கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவது உரிமையாக மாறி விட்டது - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
சமீப காலமாக அனைத்து விவகாரங்களிலும் கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவது உரிமையாக மாறி விட்டது என உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கருத்து சுதந்திரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய நீதிபதிகள், சமீப காலமாக கருத்து சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் முற்றிலும் எல்லை மீறி வருகின்றன என்றும் அதிகம் தவறாக பயன்படுத்தப்படும் உரிமையாக இவை மாறியுள்ளன என்றும் கடும் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை 2வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Comments