குல்பூஷண் ஜாதவ் விவகாரம் - முக்கியப் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்
பாகிஸ்தானில் மரண தண்டனைவிதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கில் முக்கியப் பிரச்சினைகளுக்கு பதிலளிக்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாதவுக்கு வழக்கறிஞரை நியமிப்பதற்கான இறுதி தேதியை இந்தியா தவறவிட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்திய வழக்கறிஞரைத் தான் நியமிக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எழுதிய கடிதத்தில் இந்த விவகாரத்தில் முக்கியப் பிரச்சினைகளுக்கு பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments