அமெரிக்க இளம்பெண் ஒரு மணி நேரத்தில் 716 முறை பர்பீஸ் உடற்பயிற்சி செய்து சாதனை
அமெரிக்காவின் Minnesota மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஒரு மணி நேரத்தில் 716 முறை பர்பீஸ் எனும் உடற்பயிற்சி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Stephanie Tennessen என்ற பெயர் கொண்ட அந்த இளம்பெண் நெடுஞ்சாண் கிடையாக படுத்து எழும் பர்பீஸ் உடற்பயிற்சியினை இடைவிடாமல் செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Louise Robertson என்பவர் ஒரு மணி நேரத்தில் 709 முறை செய்த தே சாதனையாக இருந்து வந்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
Comments