கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமண விவகாரம்... மணப்பெண்ணையும், அவரது தந்தையையும் இன்று நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு திருமணம் செய்து கொண்ட பெண்ணையும், அந்த பெண்ணின் தந்தையையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவும், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் தனது மகளை எம்.எல்.ஏ பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்து கடத்தி சென்று திருமணம் செய்து விட்டதாகவும், மகளை மீட்டு தரக் கோரியும், சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், இன்று சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரது தந்தையையும் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Comments