ஐபிஎல் போட்டி : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

0 2015
ஐபிஎல் போட்டி : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று களமிறங்கிய ஐதராபாத் அணியில், அதிரடியாக ஆடிய தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ 97 ரன்களும், வார்னர் 52 ரன்களும் சேர்த்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது.

இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள், ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரான் மட்டும் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசி 77 ரன்களை குவிக்க, அந்த அணி 16.5 ஓவர்கள் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம், ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments