"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெறும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வீண் போகாது - மு.க. ஸ்டாலின்
ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெறும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வீண் போகாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநில முதலமைச் சர்களுக்கு அவர், எழுதி உள்ள கடிதத்தில், ஜி.எஸ்.டி இழப்பீட்டு கணக்கில் இருந்து, இந்திய தொகுப்பு நிதிக்கு 47 ஆயிரத்து 272 கோடி ரூபாய் மாற்றப் பட்டதை சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த தொகையை திருப்பி தர, மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
எனவே, மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெறும் இந்தத் தொகையை மாநிலங்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments