நாட்டின் இறையாண்மையை காக்க விமானப்படை எப்போதும் தயாராக இருக்கும் - இந்திய விமானப்படை தளபதி பதாரியா உறுதி
நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க விமானப்படை எப்போதும், எந்த சூழலிலும் தயாராக இருக்கும் என்று உறுதி அளிப்பதாக தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை ஆண்டு விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். கொரோனா தொற்று பரவிய காலத்திலும் கூட, விமானப்படை முழு செயல்வேகத்துடன் உள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் வட எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையின் போது உடனடியாக களமாடிய அனைத்து வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்த அவர், நாட்டின் ராணுவத்திற்கு உதவும் வகையில் விமானப்படை குறுகிய காலத்திற்குள் தயார் நிலையில் காத்திருக்கும் என்றார்.
Comments