இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு போவதை தவிர்க்க : இந்தியாவில் ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலை.களின் கிளைகள் ? இந்தியாவில் துவக்க மத்திய அரசு ஆலோசனை
ஆக்ஸ்போர்ட், யேல் போன்ற பாரம்பரியமிக்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் துவக்க அனுமதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கச் செல்கின்றனர். இதனால் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு போகிறது.
இதை தவிர்க்க புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் துவக்கும் வகையில் கல்விச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் முதல் கூகுள் வரை முக்கிய பதவிகளில் இருப்பவர்களை இந்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் நிலையில் இந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் துவக்கப்பட்டால் மேலும் திறமையானவர்களை உருவாக்கலாம் என்ற பிரதமர் மோடியின் யோசனை இதன் பின்னால் உள்ளது.
Comments