பீட்ஸா டெலிவரி கொடுப்பதில் தாமதம் : தொழிலதிபர் திட்டியதால் கார் கண்ணாடியை உடைத்த டெலிவரி பாய்
சென்னையில் பீட்ஸா டெலிவரிக்கு தாமதம் ஏற்பட்டதால் திட்டிய தொழிலதிபரின் கார் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ரோசன் ரங்டா ஆர்டர் செய்த பீட்சாவை சுமார் 1 மணி நேரம் கழித்து டெலிவரி செய்தால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த டெலிவரி பாய் கீழே கிடந்த கல்லை எடுத்து தொழில் அதிபரின் ஃபார்ச்சூனர் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஏறி வேகமாக சென்றுள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் டெலிவரி பாயை தேடி வருகின்றனர்.
Comments