நடிகர் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை வழக்கில் 5 பேர் கைது

0 4689
புதுச்சேரியில் நடிகர் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் நடிகர் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநில ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் கடந்த 4-ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் ராஜசேகர் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ரசிகர் மன்ற தலைவர் பதவியை யார் வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக மணிகண்டனுக்கும் ராஜசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ராஜசேகர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து மணிகண்டனை வெட்டிக்கொன்றுள்ளனர்.

இதனை போலீசாரிடம் அவர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து, மேலும் இருவர் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments