பிரான்ஸில் கொரோனா வேகமாக பரவும் இடங்களில் புதிய கட்டுப்பாடுகள் - அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
பிரான்ஸில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இடங்களில் புதிய கட்டுப்பாடுகளை அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
அந்நாட்டில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மேலும் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு, கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Comments