கொல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடந்த பேரணியில் கலவரம்

0 1539
கொல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடந்த பேரணியில் கலவரம்

மேற்கு வங்கத்தில் தங்களது கட்சி தொண்டர்கள் கொல்லப்படுவதாக கூறி, கொல்கத்தாவில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அலுவலகத்தை நோக்கி பாஜகவினர் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது.

நபான்னா சலோ என்ற இந்த பேரணியில் கொல்கத்தாவின் பல இடங்களில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தடைகளை மீறி பேரணியாக செல்ல முயன்ற பாஜகவினர் மீது தடியடியும், தண்ணீரும் பீய்ச்சியும் போலீசார் கலைத்தனர்...

ஜனநாயக முறையில் பேரணியாக சென்ற தங்கள் மீது மம்தா அரசு அடக்குமுறைய கட்டவிழ்த்து விட்டதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குண்டர்களும் போலீசாரும் சேர்ந்து தங்கள் மீது கல் எறிந்ததாக பாஜக நிர்வாகி கைலாஷ் விஜயவர்கியா கண்டனம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments