ஹத்ராஸ் பெண்ணை கொலை செய்தது யார்.? வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் தாக்கூர் பரபரப்பு புகார்

0 13212
ஹத்ராஸ் இளம்பெண்ணை, அவரது தாயும், சகோதரனுமே கொலை செய்திருக்கலாம் என வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் புகார் தெரிவித்துள்ளான்.

ஹத்ராஸ் இளம்பெண்ணை, அவரது தாயும், சகோதரனுமே கொலை செய்திருக்கலாம் என வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் புகார் தெரிவித்துள்ளான்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தீப்  மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உயிரிழந்த பெண்ணுடன் தான் நட்புடன் பழகி வந்ததாகவும், நேரில் மட்டுமின்றி செல்போனிலும் பேசி வந்ததாகவும் கூறியுள்ளான்.

மேலும் சம்பவ தினத்தன்று அந்த பெண்ணை பார்க்க தான் வயலுக்கு சென்ற போது சகோதரர்களும், தாயும் உடனிருந்ததால் அந்த பெண் கேட்டுக்கொண்டதற்கிணங்கி வீடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும் தங்களது பழக்கம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்காததாலேயே அவரை சித்ரவதை செய்து குடும்பத்தினர் கொன்றிருக்கலாம் எனவும் கூறியுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments