தமிழ் மொழியை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்புக்காக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

0 1312
தமிழ் மொழியை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்புக்காக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

செம்மொழியான தமிழ் மொழியை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்புக்காக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரியில், 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பில் பழமையும், பெருமையும் மிக்க தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முறையிட்ட வழக்கறிஞர் அழகுமணி, தமிழ் மொழியை இணைத்து புதிதாக அறிவிப்பு வெளியிட கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, மனுவாகத் தாக்கல் செய்யவும், அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments