வளிமண்டல சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

0 2924

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் பகுதியில் நளை உருவாக உள்ள காற்றழுத்த தழ்வு அடுத்த நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்பதால் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று இரவுடன் கரைத்திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குப்புநத்தம் பகுதியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments